தேசிய செய்திகள்

மீண்டும் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்; குழப்பத்தில் பயனாளர்கள் + "||" + Facebook, Instagram down again in different parts of the world, users clueless

மீண்டும் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்; குழப்பத்தில் பயனாளர்கள்

மீண்டும் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்; குழப்பத்தில் பயனாளர்கள்
உலகின் பல்வேறு பகுதிகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மீண்டும் முடங்கின.
புதுடெல்லி,

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நவம்பர் 19 அன்று ட்விட்டர்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருந்ததாக புகார் அளித்து உள்ளனர்.

ஆன்லைன் செயலிழப்புகளை கண்காணிக்கும் டவுன்டெக்டர் வலைத்தள அறிக்கையின் படி,  முழு பேஸ்புக் நெட்வொர்க்கும்  செயலிழக்கவில்லை. ஆனால் பல பகுதிகளில் சேவைகளில் இடையூறு  இருந்ததாக கூறி உள்ளது.

63 சதவீதம் பேர் மொத்த இருட்டடிப்பு செய்ததாகக் கூறினாலும், 19 சதவீதம்  பேர் உள்நுழைவதில் சிக்கல்கள் இருந்தன என்றும், 16 சதவீதம்  பேர் தங்கள் செய்திகளை பதிவிடுவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் கூறி உள்ளனர்.

சமூக வலைப்பின்னல் தளமானது சமீபத்திய செயலிழப்பை, அடையாளம் காணவோ அல்லது அதுபற்றி கருத்து தெரிவிக்கவோ இல்லை.

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் செப்டம்பர் மாதத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை மொத்த செயலிழப்பை சந்தித்தன. ஆயிரக்கணக்கான பயனர்கள் ட்விட்டருக்குச் சென்றதால் சமூக ஊடக தளங்களை பயன்படுத்த முடியவில்லை என்று புகார் கூறினர்.

பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் எதிர்கொண்ட மிகப்பெரிய செயலிழப்பு மார்ச் மாதத்தில் 14 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த பிரச்சினைக்கு டேட்டாபேசில் ஏற்பட்ட அதிக சுமையே காரணம் என்று பேஸ்புக் குற்றம் சாட்டியது.

தொடர்புடைய செய்திகள்

1. ட்ரெண்டாகும் இந்த வருடத்திற்கான முதல் சேலஞ்ச்... தானிய சேலஞ்ச்
சமூக வலைதளங்களில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு சவால்கள் வைரலாகி அதனை பலரும் செய்து வீடியோவை பதிவிட்டு வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது.
2. குடியுரிமை சட்டம் குறித்து பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து பதிவிட்ட சமாஜ்வாடி தொண்டர் மீது வழக்கு
குடியுரிமை சட்டம் குறித்து பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து பதிவிட்ட சமாஜ்வாடி தொண்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
3. பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்ற மாணவியை பாராட்டிய கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை
சமூக வலைதளத்தில் சாதாரணமாக மாணவி ஒருவர் தான் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கியதைப் பதிவிட அதற்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் இருந்து எதிர்பாராத பாராட்டு கிடைத்துள்ளது.
4. உலக அளவில் செயலிழந்த சமூக வலைதளம் ட்விட்டர்
உலக அளவில் தொழிநுட்ப கோளாறால் செயலிழந்து உள்ளது சமூக வலைதளம் ட்விட்டர்.
5. பேரழிவு வெள்ளத்திலும் சிக்கலான நேரத்தை ரசிக்கும் மக்கள்
வேதனையான சம்பவங்கள் நடக்கும் போதும் மக்கள் சோர்வடையாமல், ஐயோ... என்று புலம்பி அழுது ஒப்பாரி வைக்காமல் அந்த சிக்கலான நேரத்தையும் ரசிக்க கூடிய சிலர் இருக்கிறார்கள் என்று கூறலாம்.