மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் + "||" + The chance of rain in the Tamil Nadu state for the next 2 days - Chennai Meteorological Department

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழையும் சில மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  தமிழகத்தில் பருவமழை வழக்கத்தை விட இந்த ஆண்டு 9 % குறைவாக பெய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக்கடல் சென்றதால் மழை குறைந்ததாக அவர் குறிப்பிட்டார். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை குறைவாக பெய்துள்ளது என்றும் புவனகிரியில் அதிகபட்சம்  8 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், “தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழை சேதமடைந்த சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சேதமடைந்த சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
2. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மழை - சென்னை வானிலை மையம்
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. சென்னையில் 14 சதவீதம் மழை குறைவு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பை விட மழை 14 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. நாகையில் பலத்த மழை: குடியிருப்பு பகுதியில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தேங்கி நின்றதால் துர்நாற்றம்
நாகையில் பலத்த மழை பெய்ததால் குடியிருப்பு பகுதியில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தேங்கி நின்று துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
5. சென்னையில் சில இடங்களில் பரவலாக மழை
சென்னையில் இன்று காலை சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.