உலக செய்திகள்

இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் + "||" + US approves sale of 13 Naval guns worth $1 billion to India

இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை  விற்க அமெரிக்கா ஒப்புதல்
இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்க பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கு 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகள் மற்றும் ராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள், உதிரி பாகங்கள், அவற்றை கையாள்வதற்கான பயிற்சி, தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த ராணுவ வியாபாரம் மூலம் தங்கள் நாட்டின் வெளியுறவு கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் தனது எதிரிகளை திறன்பட எதிர்கொள்ள இந்த ஆயுதங்கள் உதவியாக அமையும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான் -அமெரிக்கா குற்றச்சாட்டு
பாகிஸ்தான் கள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.
2. அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு
மீண்டும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு விடுத்து உள்ளார்.
3. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: வார்னர், பிஞ்ச் சதத்தால் ஆஸ்திரேலியா வெற்றி
மும்பையில் நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை ஊதித்தள்ளியது.
4. “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது” - ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி நாதெள்ளா கருத்து
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என அவர் கூறி உள்ளார்.
5. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: மும்பையில் இன்று நடக்கிறது
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது.