தேசிய செய்திகள்

இஸ்ரோ: கார்டோசாட் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தும் தேதி மாற்றம் + "||" + ISRO reschedules CARTOSAT 3 launch to November 27

இஸ்ரோ: கார்டோசாட் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தும் தேதி மாற்றம்

இஸ்ரோ: கார்டோசாட் 3  விண்கலத்தை விண்ணில் செலுத்தும் தேதி மாற்றம்
கார்டோசாட் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான தேதியை இஸ்ரோ மாற்றியுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், பூமி ஆராய்ச்சிக்காக ‘கார்ட்டோசாட்’ என்று அழைக்கப்படும், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதுவரை 8 கார்டோசாட் செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் 9-வது செயற்கைகோளாக கார்ட்டோசாட்-3 என்ற செயற்கைகோளை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. இது மேம்படுத்தப்பட்ட தொலை உணர்வு செயற்கைகோள் ஆகும். இந்த செயற்கைகோளுடன் அமெரிக்காவின் வணிக ரீதியிலான 13 ‘நானோ’ வகை செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

இந்த கார்ட்டோசாட்-3 செயற்கைகோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.28 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தேதி மாற்றப்பட்டு, வரும் 27 ஆம் தேதி 9.28 மணிக்கு கார்டோசாட் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இஸ்ரோவில் டெக்னீசியன் பணிகள்
இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 182 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதுபற்றிய விரிவான விவரம் வருமாறு:-
2. இஸ்ரோவின் ‘ஜிசாட்-30’ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது: தொலைக்காட்சி ஒளிபரப்பு உயர்தரமாக கிடைக்கும்
பிரெஞ்சு கயானாவில் இருந்து இஸ்ரோவின் ஜிசாட்-30 தகவல் தொடர்பு செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் தொலைக்காட்சி ஒளிபரப்பு உயர்தரமாக கிடைக்கும்.
3. இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டுக்கான 26 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது
நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட்டிற்கான 26 மணி நேர கவுண்டவுன் இன்று காலை தொடங்கியது.
5. இஸ்ரோ: நிலவில் ஆர்கான் 40 வாயு இருப்பது கண்டுபிடிப்பு
சந்திரயான்-2 விண்கலம் மூலம் நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ஆர்கான் 40 வாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.