மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர்; ஆனால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்-முதல்வர் பழனிசாமி + "||" + Some are stalling for local elections But there is definitely a local election Chief Minister Palanisamy

உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர்; ஆனால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்-முதல்வர் பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர்; ஆனால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்-முதல்வர் பழனிசாமி
உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி  மாவட்டம் உதயமானது . தென்காசி இசக்கிமகால் வளாகத்தில் காலை நடைபெற்ற விழாவில் புதிய மாவட்டத்தின் செயல்பாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 5 ஆயிரம் பயனாளிகளுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-

 உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களின் கோரிக்கைப்படி நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தென்காசி மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய மாவட்ட தலைநகருக்கு 50 கிமீ தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதனால் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது .

உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்  என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மேகதாது அணையை கட்ட ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது; எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
மேகதாது அணையை கட்ட ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
2. ‘நீட்’ தேர்வை கொண்டுவந்தது யார்?எடப்பாடி பழனிசாமி ஆவேசம்; காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றம்
‘நீட்’ தேர்வை கொண்டுவந்தது யார்? என்று சட்டசபையில் அ.தி.மு.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
3. திருவண்ணாமலையில் எடப்பாடி பழனிசாமி காரில் கிரிவலம் சென்றார்
திருவண்ணாமலையில் எடப்பாடி பழனிசாமி காரில் கிரிவலம் சென்றார்.
4. 12 மாவட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம்: திருவண்ணாமலை, விழுப்புரத்திற்கு இன்று செல்கிறார்
2 மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அந்த வகையில், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அவர் இன்று செல்கிறார்.
5. சுதந்திர தினத்தையொட்டி எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார்
இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றி உரையாற்றினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...