கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட்: விராட் கோலி சதம் அடித்து அசத்தல் + "||" + Kohli ton lights up Kolkata

வங்காளதேசத்துக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட்: விராட் கோலி சதம் அடித்து அசத்தல்

வங்காளதேசத்துக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட்: விராட் கோலி சதம் அடித்து அசத்தல்
இந்தியா விளையாடும் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து விராட் கோலி அசத்தினார்.
கொல்கத்தா,

இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள  ஈடன்கார்டன் மைதானத்தில்  நடைபெற்று வருகிறது.  இந்த போட்டி,  இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டது.  டாஸ் வென்ற வங்காளதேச அணி கேப்டன் மொமினுல் ஹாக் பேட்டிங்கை தேர்வு செய்தார்.   முடிவில் வங்காளதேச அணி  30.3 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இந்திய அணியில் அதிகப்பட்சமாக இஷாந்த் சர்மா 5, உமேஷ் யாதவ் 3, ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.   இதனையடுத்து , இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். இந்திய அணி நேற்றைய ஆட்டநேர முடிவின்போது 46 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. 

2-ஆம் நாள் ஆட்டத்திலும், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் தொடர்ந்தது. விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் 51 ரன்கள் குவித்த ரகானே ஆட்டமிழந்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து விராட் கோலி, வரலாற்றில் இடம் பிடித்தார்.  டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி அடித்துள்ள 27-வது சதம் இதுவாகும். 

இந்திய அணி 69 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. விராட் கோலி 102 ரன்களுடன், ஜடேஜா 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 11 ஆயிரத்து 200-க்கும் அதிகமானோர் குணம் அடைந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
2. வரலாற்று முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டு காலத்தில் வேகமான முன்னேற்றம் - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
வரலாற்று முக்கிய முடிவுகளை எடுத்து, இந்தியா கடந்த ஓராண்டு காலத்தில் வேகமான முன்னேற்றம் கண்டுள்ளதாக மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
3. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
4. "இந்தியாவை தட்டி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் கருத்து
இந்தியாவிற்கும், சீனாவிற்கு இடையே நடக்கும் மோதலால் பெரிய ஆபத்து வரப் போவதாக பாகிஸ்தான் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.
5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.51 லட்சமாக உயர்வு: 24 மணி நேரத்தில் 6,387 பேருக்கு தொற்று
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 1.51 லட்சமாக உயர்ந்தது. 24 மணிநேரத்தில் 6,387 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.