தேசிய செய்திகள்

பா.ஜனதா ஆட்சி அமைப்பதற்காக அஜித்பவார் மிரட்டப்பட்டார் - சஞ்சய் ராவத் பரபரப்பு பேட்டி + "||" + Ajit Pawar was threatened to set up the Janata Party - Sanjay Rawat Interview Interview

பா.ஜனதா ஆட்சி அமைப்பதற்காக அஜித்பவார் மிரட்டப்பட்டார் - சஞ்சய் ராவத் பரபரப்பு பேட்டி

பா.ஜனதா ஆட்சி அமைப்பதற்காக அஜித்பவார் மிரட்டப்பட்டார் - சஞ்சய் ராவத் பரபரப்பு பேட்டி
ஆட்சி அமைப்பதற்காக பாரதீய ஜனதாவுடன் சேருவதற்கு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் மிரட்டப்பட்டார் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.
மும்பை,

மராட்டியத்தில் தேர்தல் முடிவு வெளியான நாளில் இருந்து, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தனது கட்சியை ஆட்சி கட்டிலில் அமரவைப்பதற்கு தீவிரம் காட்டி வந்தார். சிவசேனாவை சேர்ந்தவர்தான் மராட்டியத்தின் அடுத்த முதல்-மந்திரி எனவும் முழங்கினார்.


காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து சிவசேனா தலைமையில் புதிய அரசு அமைய அவர் தீவிரமாக பாடுபட்டார்.

ஆனால் நேற்று நிகழ்ந்த அரசியல் திருப்பம் சஞ்சய் ராவத்துக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி விட்டது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் கடைசி நேரத்தில் பாரதீய ஜனதா பக்கம் சாய்ந்து விட்டதால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதுதொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த சஞ்சய் ராவத் கூறியதாவது:-

அஜித்பவார் முதுகில் குத்திவிட்டார்

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் சிவசேனாவின் முதுகில் குத்தி விட்டார். ஆட்சி அமைப்பதற்காக பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து துரோகம் இழைத்து விட்டார். மராட்டியம் ஒரு போதும் அஜித்பவாரை மன்னிக்காது. அவரது இந்த முடிவுக்கு சரத்பவார் ஒப்புதல் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அளித்த மற்றொரு பேட்டியில், “ஆட்சி அமைப்பதற்காக பாரதீய ஜனதாவுடன் சேருவதற்கு அஜித்பவாரை அந்த கட்சி மிரட்டி உள்ளது. அந்த கட்சியின் மற்றொரு தலைவர் தனஞ்செய் முண்டேவையும் அவர்கள் தொடர்பு கொண்டு உள்ளனர். அஜித்பவார் மீண்டும் தேசியவாத காங்கிரசுக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. அவர் எப்படி மிரட்டப்பட்டார் என்பது பற்றிய தகவல்கள் எங்களிடம் உள்ளது. அதை விரைவில் வெளிப்படுத்துவோம்” என்றார்.

அஜித்பவார் மீது கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. மதுரை பஸ் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் சோதனையால் பரபரப்பு
மதுரை பஸ் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, போலீசார் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல்: பா.ஜனதா பொதுச்செயலாளர் உள்பட 350 பேர் மீது வழக்கு
மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பா.ஜனதா பொதுச்செயலாளர் உள்பட 350 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. மின்இணைப்பை துண்டிக்க சென்ற ஊழியரிடம், நிருபர்கள் என்று மிரட்டிய அண்ணன்-தம்பி கைது
தேனியில் மின்இணைப்பை துண்டிக்கச் சென்ற ஊழியரிடம் தங்களை நிருபர்கள் என்று கூறி மிரட்டிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. பா.ஜனதா ஆட்சியை கலைக்கும் அஸ்திவாரம் வெங்காய விலை உயர்வு - திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
பா.ஜனதா ஆட்சியை கலைக்கும் அஸ்திவாரம் வெங்காய விலை உயர்வு என்று திண்டுக்கல்லில் திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.
5. போலீஸ் அதிகாரியை மிரட்டிய உத்தரபிரதேச பெண் மந்திரி - விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவு
போலீஸ் அதிகாரிக்கு உத்தரபிரதேச பெண் மந்திரி ஒருவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.