தேசிய செய்திகள்

அரசியலுக்கு வரும் ஆசை எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை - பிரதமர் மோடி + "||" + I have never had a desire to come to politics - Modi

அரசியலுக்கு வரும் ஆசை எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை - பிரதமர் மோடி

அரசியலுக்கு வரும் ஆசை எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை - பிரதமர் மோடி
அரசியலுக்கு வரும் ஆசை தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி வழியாக ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில்  மக்களுடன் உரையாடி வருகிறார்.

நவம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையான இன்று தேசிய மாணவர் படை தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்றையை ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை உறுப்பினர்களுடன் மோடி கலந்துரையாடினார்.

இந்த உரையாடலின் போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் மோடி பதிலளித்தார். அப்போது ஹரி என்ற மாணவர், “நீங்கள் அரசியல்வாதி ஆகவில்லை என்றால் வேறு என்ன செய்திருப்பீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த மோடி, “ஒவ்வொரு குழந்தைக்கும் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்பது குறித்து பல ஆசைகள் இருக்கும். ஆனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அரசியலுக்கு வரும் ஆசை எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை.

இந்திய அரசியலில் இப்போது நான் ஒரு முக்கியமான நபராக இருப்பதால், நாட்டின் நலனுக்காக உழைப்பதில் நான் முழுமையாக ஈடுபட்டுள்ளேன்.

‘அரசியலுக்கு வரவில்லை என்றால் நான் என்ன செய்திருப்பேன்’ என்ற எண்ணமே எனக்கு வந்ததில்லை. நான் எங்கு இருந்தாலும் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, நாட்டின் நலனுக்காக இரவும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருப்பேன்” என்று அவர் கூறினார்.

மேலும் தேசிய மாணவர் படையில் தான் இருந்தது குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்ட அவர், தன்னை இப்போதும் தேசிய மாணவர் படையின் ஒரு உறுப்பினராகவே கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. உடல் வலிமையாக இருக்கும் போதே மனமும் முழு வலிமையுடன் செயல்படும் - பிரதமர் மோடி
உடல் வலிமையாக இருக்கும் போதே மனமும் முழு வலிமையுடன் செயல்படும் என பிரதமர் மோடி கூறினார்.
2. தமிழகம் உள்பட 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
தமிழகம் உள்பட 7 மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
3. இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை
இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
4. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள், பிரதமர் மோடியுடன் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை திமுக எம்.பிக்கள் திடீரென சந்தித்துப்பேசினர்.
5. தேநீர் வழங்க முன்வந்த ஹரிவன்ஷின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது: பிரதமர் மோடி
தன்னை அவமதித்த எம்.பிக்களுக்கு தேநீர் வழங்க முன்வந்த ஹரிவன்ஷின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.