மாநில செய்திகள்

தமிழக சட்டசபை டிஜிட்டல் மயமாகிறது எம்.எல்.ஏ.க்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம் + "||" + Tamil Nadu Assembly Digital Help MLAs Plan to provide specialized training

தமிழக சட்டசபை டிஜிட்டல் மயமாகிறது எம்.எல்.ஏ.க்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம்

தமிழக சட்டசபை டிஜிட்டல் மயமாகிறது எம்.எல்.ஏ.க்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம்
தமிழக சட்டசபை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. இதையொட்டி எம்.எல்.ஏ.க்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் மற்றும் டெல்லி மேல்-சபை ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதற்காக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, தேசிய இ-விதான் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, சட்டசபைகளில் பேப்பர்களின் பயன்பாடு பெருமளவில் குறைக்கப்படும்.

இ-விதான் திட்டம் நடை முறைக்கு வந்ததும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் வழியில் அளிக்கப்படும். இ-விதான் இணையதளத்திலும் நாடாளுமன்றம், டெல்லி மேல்- சபை உள்பட அனைத்து சட்டமன்றங்களும் இணைக்கப்பட்டு இருக் கும்.

அதில், எம்.எல்.ஏ.க்கள் தனியாக லாக்-இன் செய்து கொள்ள முடியும். அந்த லாக்-இன்-ல் அவர்களுக்கு சட்டசபை செயலகம் மூலம் தகவல்கள், நோட்டீஸ்கள், சட்டசபை நிகழ்ச்சிகள் அளிக்கப்படும். அவர்களும் அந்த தளத்தின் வழியாக பதிலளிக்க வேண்டும்.

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சபாநாயகர் முடிவு செய்தால், அதையும் இ-விதான் வழியாக ஒளிபரப்பு செய்யலாம். தற்போது இமாசல பிரதேச சட்டசபை முழுமையாக இ-விதான் திட்டத்தை செயல்படுத்துகிறது.

தமிழக சட்டசபையில் இதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சட்டசபை செயலகம் தீவிரமாக எடுத்து வருகிறது. முதல்கட்டமாக அதிகாரிகள், அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. இதை சட்டசபை குழு கூட்ட அறையில் இன்று (திங்கட்கிழமை) சபாநாயகர் ப.தனபால் தொடங்கி வைக்கிறார்.

தமிழக சட்டசபை அலுவலர்களுக்கு டெல்லியில் அடுத்தகட்ட பயிற்சி நடத்தப்படும். இ-விதான் திட்டத்தை பயன்படுத்தும் முறை பற்றி பின்னர் எம்.எல்.ஏ.க்களுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை என்.ஐ.சி. தயாரித்துள்ளது. இந்தத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு, சட்டசபையில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் விவாதங்களையும் உடனடியாக பதிவேற்றம் செய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது
2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. நகராட்சி நிர்வாகத் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடக்கிறது.
2. தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது: மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.
3. தமிழக சட்டசபை நாளை கூடுகிறது
தமிழக அரசுத் துறைகளின் மானிய கோரிக்கை பற்றி விவாதிக்க சட்டசபை நாளை கூடுகிறது.
4. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் 20-ந் தேதி நிறைவு - சபாநாயகர் ப.தனபால் அறிவிப்பு
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் 20-ந் தேதி நிறைவடையும் என்று சபாநாயகர் ப.தனபால் அறிவித்துள்ளார்.
5. நாளை தமிழக பட்ஜெட் கூட்டம்: முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டம், ஹைட்ரோ கார்பன், குரூப் - 4 தேர்வு முறைகேடு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.