மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் + "||" + Rainfall likely for next 2 days in Tamil Nadu - Chennai Meteorological Department

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பசலனம் காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்.

சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 7 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. இன்று முதல் கடைகளில் தேநீர் அருந்த அனுமதி - முழுமையாக இயங்க தொடங்கிய தேநீர் கடைகள்
இன்று முதல் கடைகளிலேயே தேநீர் அருந்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.
2. பாகூர் பகுதியில் பலத்த மழை தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நகர பகுதியை காட்டிலும் புறநகர் பகுதியில் அதிகளவு மழை பதிவானது.
3. மாநிலங்களுக்குள்-மாநிலங்களுக்கு இடையிலான பொது - தனியார் பேருந்து போக்குவரத்துக்கு தடை- முதல்வர் பழனிசாமி
மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை தொடரும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
4. சென்னையில் குறையும் கொரோனா மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை -முதல்வர் பழனிசாமி
சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் எட்ப்பாடி பழனிசாமி கூறினார்.
5. கேரளா தங்கம் கடத்தல் விவகாரம்: தமிழகத்திலும் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டம்
கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரத்தை தொடர்ந்து தமிழகத்திலும் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.