தேசிய செய்திகள்

டெல்லியை தகர்க்கும் முயற்சி முறியடிப்பு: வெடிபொருட்களுடன் 3 பேர் கைது + "||" + Three men linked with ISIS arrested in Assam

டெல்லியை தகர்க்கும் முயற்சி முறியடிப்பு: வெடிபொருட்களுடன் 3 பேர் கைது

டெல்லியை தகர்க்கும் முயற்சி முறியடிப்பு: வெடிபொருட்களுடன் 3 பேர் கைது
டெல்லியை தகர்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது. மேலும் அந்த சம்பத்தில் வெடிபொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,

டெல்லியை தகர்க்க சதித்திட்டம் தீட்டி இருந்த 3 பேரை டெல்லி போலீசார் பிடித்தனர். 3 பேரும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். முகாதிர் இஸ்லாம், ரஞ்சித் அலி, ஜமீல் லுயிட் என்ற அந்த 3 பேரும் டெல்லி போலீசாரும், அசாம் மாநில போலீசாரும் கூட்டாக நடத்திய வேட்டையில் பிடிபட்டனர்.


அவர்களிடம் இருந்து ஒரு கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த வெடிபொருட்களும், 2 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேரும் வகுப்பு தோழர்கள் ஆவர். 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். டெல்லியில் சிலரையும் மூளைச்சலவை செய்து வைத்துள்ளனர். அங்கு கால்பந்து அதிகமாக விளையாடும் பகுதிகளில் குண்டு வெடிப்பு நடத்த சதித்திட்டம் தீட்டி இருந்தனர். அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் உள்ளூர் திருவிழாவின்போது நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வில்வித்தை பயிற்சியின் போது விபரீதம்... சிறுமியின் தோளில் பாய்ந்த அம்பு...!
அசாம் மாநிலத்தில் வில்வித்தை பயிற்சியின் போது 12 வயது சிறுமியின் மீது அம்பு பாய்ந்தது.
2. மோடியின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பாஜக முதல்-மந்திரி எதிர்ப்பு
மோடியின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அசாம் முதல்-மந்திரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். எதிர்ப்பு தெரிவித்த முதல் பாஜக முதல்-மந்திரி இவர் ஆவார்.
3. பிரதமர் மோடி அசாம் வந்தால் அவருக்கு எதிராக பிரமாண்ட போராட்டம் ; மாணவர் சங்கம் அறிவிப்பு
பிரதமர் மோடி அசாம் வந்தால் அவருக்கு எதிராக பிரமாண்ட போராட்டம் நடத்தப்படும் என்று அசாம் மாணவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
4. வீழ்ச்சி தொடங்கி விட்டது: பீகார், டெல்லியிலும் பா.ஜனதா தோற்கும் - காங்கிரஸ் சொல்கிறது
வீழ்ச்சி தொடங்கி விட்டதாகவும், பீகார், டெல்லியிலும் பா.ஜனதா தோற்கும் என்றும் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. வன்முறையில் ஈடுபட்ட 6 பேர் கைது: டெல்லியில் 144 தடை உத்தரவு - போலீசார் கொடி அணிவகுப்பு
டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.