மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Chance of heavy rain in Tamil Nadu - Chennai meteorological center

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 30, 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும்.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச இருப்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை தொடரும் -சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை கனமழை கொட்டியது.
3. வடகிழக்கு பருவமழை மேலும் 4 நாட்களுக்கு தொடர வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழை மேலும் 4 நாட்களுக்கு தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. சென்னையில் சில இடங்களில் கனமழை
சென்னையில் சில இடங்களில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
5. வடகிழக்கு பருவமழை: சென்னையில் இயல்பை விட 17 சதவீதம் குறைவு
சென்னையில் இயல்பைவிட 17 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை