மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம் இன்று உதயம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார் + "||" + Chengalpattu district today Edappadi Palanisamy is starting

செங்கல்பட்டு மாவட்டம் இன்று உதயம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

செங்கல்பட்டு மாவட்டம் இன்று உதயம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தில் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) உதயமாகிறது. புதிய மாவட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
சென்னை,

தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் நிர்வாக வசதிக்காக மேலும் 5 மாவட்டங்கள் புதிதாக தொடங்கப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, 33-வது மாவட்டமாக தென்காசியும், 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சியும் தொடங்கப்பட்டது.


இந்தநிலையில், நேற்று ஒரே நாளில் 2 மாவட்டங்கள் புதிதாக தொடங்கப்பட்டன. 35-வது மாவட்டமாக திருப்பத்தூரும், 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டையும் உதயமாகின. அறிவிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் கடைசியாக செங்கல்பட்டு மாவட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) உதயமாகிறது.

இதற்கான விழா செங்கல்பட்டு வேண்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று மதியம் 12.15 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி விழாவில் பேசுகிறார்.

இதில், தலைமைச் செயலாளர் க.சண்முகம், கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 9.45 மணிக்கு நடைபெறும் விழாவில், பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்த விழாவுக்கு, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தலைமைச் செயலாளர் க.சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் பொங்கல் பரிசு 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,363 கோடியே 13 லட்சம் செலவில் வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பில், ரூ.1,000 ரொக்கப் பணம், பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

மேலும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 4 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் ரூ.88 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டப் பணிகளையும் தொடங்கிவைக்கிறார்.

அதாவது, இஸ்ரேல், ஸ்வீடன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் மறைமுக மறுபயன்பாடு முறையின் மூலம் கழிவுநீரை 100 சதவீதம் சுத்திகரித்து, பெருங்குடி, போரூர் ஏரிகளில் கலந்து, அந்த தண்ணீரை சுத்திகரித்து சென்னை மக்களுக்கு குடி நீராக வினியோகிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 360 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 360 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 305 பேருக்கு கொரோனா பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 305 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.