மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை தீவிரம்; தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அதிக மழைப்பதிவு + "||" + Northeast monsoon intensity; Heavy rainfall in various districts across Tamil Nadu

வடகிழக்கு பருவமழை தீவிரம்; தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அதிக மழைப்பதிவு

வடகிழக்கு பருவமழை தீவிரம்; தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அதிக மழைப்பதிவு
தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவு மழைப்பதிவாகி உள்ளது.
சென்னை,

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.  இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.  பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவு மழைப்பதிவாகி உள்ளது.

இதன்படி, தூத்துக்குடியில் 16 செ.மீ., சாத்தான்குளம் - 18 செ.மீ., குலசை - 14 செ.மீ., திருச்செந்தூர் - 10 செ.மீ. மழை பதிவு.

திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் தலா 10 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது.

நீடாமங்கலம் மற்றும் முத்துப்பேட்டையில் தலா 9 செ.மீ., பாண்டவையாறு தலைப்பில் 8 செ.மீ. மழை பதிவு.

ராமநாதபுரம்: ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனில் தலா 11 செ.மீ. மழை பதிவு.

தஞ்சை: அதிகபட்சமாக கீழ் அணைக்கட்டில் 10 செ.மீ. மழையும், வெட்டிக்காடில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இதுதவிர, திருவண்ணாமலை: வந்தவாசி, நெற்குணம், தெள்ளார், தேசூர், சாலவேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.

மதுரை: மேலூர், திருவாதவூர், ஒத்தக்கடை, சிட்டம்பட்டி, கீழவளவு, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.

சென்னை: மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரே நாளில் 100 மில்லியன் கனஅடி நீர் உயர்ந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு 649 மில்லியன் கன அடியிலிருந்து 749 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது.

மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,182 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சோழிங்கநல்லூர், கிண்டியில் 11 செ.மீ., மயிலாப்பூரில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

நெல்லையில் மணிமுத்தாறு 15 செ.மீ., அம்பாசமுத்திரம் 9.5 செ.மீ., பாளையங்கோட்டை 8 செ.மீ., ராதாபுரம் 4.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், பருவமழை கைகொடுத்ததால் மானாவாரி பயிர்கள் விளைச்சல் அமோகம்
வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி பயிர்களின் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2. வடகிழக்கு பருவமழை : தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
3. வடகிழக்கு பருவமழை தீவிரம்: கொடைக்கானலுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் வருகை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி கொடைக்கானலுக்கு மீட்புகுழுவினர் வந்துள்ளனர்.
4. அடுத்த வார இறுதியில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடையும் - வானிலை நிபுணர்கள்
அடுத்த வார இறுதியில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடையக்கூடும் என்றும் இதனால் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர் மட்டத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
5. வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் மாவட்டத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - ஆராய்ச்சி நிலையம் தகவல்
வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் நாமக்கல் மாவட்டத்தின் சில இடங்களில் சிறு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.