மாநில செய்திகள்

கனமழை எதிரொலி; போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட ஸ்டாலின் வலியுறுத்தல் + "||" + Heavy rain; Stalin's insistence that district administrations function on a wartime basis

கனமழை எதிரொலி; போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட ஸ்டாலின் வலியுறுத்தல்

கனமழை எதிரொலி; போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் சூழலில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.  இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.  பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவு மழைப்பொழிவு கிடைத்து வருகிறது.

கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.  இதனால் பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என அரசை வலியுறுத்தி உள்ளார்.

வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசும், அரசு அதிகாரிகளும் உடனடியாக இறங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்டத்தால் இதுவரை கிடைத்த வருமானத்தையும் விவசாயிகள் இழக்க நேரிடும்; மு.க. ஸ்டாலின்
வேளாண் சட்டத்தால் இதுவரை கிடைத்த வருமானத்தையும் விவசாயிகள் இழக்க நேரிடும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
2. பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை; 36 பேர் பலி
பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 89 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. மே.வங்கம், ஒடிசா, ஜார்க்கண்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம்
மே.வங்கம், ஒடிசா, ஜார்க்கண்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. கனமழை: வடகர்நாடகத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன சாலைகள், பாலங்கள் மூழ்கின-போக்குவரத்து துண்டிப்பு
வடகர்நாடகத்தில் இடைவிடாது கொட்டி தீர்க்கும் கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
5. மிக கனமழை பெய்யும் புனே, சத்தாராவுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ மும்பையிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு
புனே, சத்தாராவில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டு உள்ளது. மும்பையிலும் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.