மாநில செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை; வானிலை ஆய்வு மையம் + "||" + Thunder showers in Tamil Nadu, Puducherry for the next 2 days; Meteorological Center

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை; வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை; வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும்.  ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  

இதேபோன்று புதுச்சேரி, சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது.

லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் காலையில் சில இடங்களில் லேசான மழை
சென்னையில் இன்று காலை சில இடங்களில் லேசான அளவில் மழை பெய்துள்ளது.
2. மானாமதுரை பகுதியில் தொடர் மழை: செங்கல் உற்பத்தி கடும் பாதிப்பு - இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
மானாமதுரையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
3. மழையால் சாலைகள் சேதம், நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தொண்டியில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
4. கம்பம் பகுதியில் தொடர்மழை: வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள் - அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை
கம்பம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் அவற்றை அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
5. மாவட்டத்தில் பரவலாக மழை: நாமக்கல்லில் அதிகபட்சமாக 20 மி.மீட்டர் பதிவு
நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தாலும், நாமக்கல்லில் அதிகபட்சமாக 20 மி.மீட்டர் மழை பதிவானது.