மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து பொங்கல் பரிசு - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு + "||" + Pongal gift with local elections in mind mk stalin

உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து பொங்கல் பரிசு - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து பொங்கல் பரிசு - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து பொங்கல் பரிசு தொகுப்பை முன் கூட்டியே அ.தி.மு.க. அரசு வழங்கி வருகிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில்  தி.மு.க. எம்.எல்.ஏ., பெரியண்ணன் அரசு இல்ல திருமண விழா நடைபெற்றது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பாராளுமன்ற தேர்தலில் பொய்களை கூறி தி.மு.க. வெற்றி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். அப்படியென்றால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பொய் கூறி வெற்றி பெற்றதாக அவரால் கூறமுடியுமா? 

உள்ளாட்சி தேர்தலை யாராவது நிறுத்தி விட மாட்டார்களா? என்று அ.தி.மு.க. நினைத்து வருகிறது.  முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. நினைக்கிறது.

1989-ல் நானும் ஸ்டாலினும் எம்.எல்.ஏ. ஆனோம். ஆனால் நான் முதல்வராகிவிட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். நான் மண்புழு போன்று ஊர்ந்து சென்று முதல்வராகமாட்டேன். நான் கருணாநிதியின் மகன். தன்மானத்தை இழக்க மாட்டேன். அந்த பதவி எனக்கு தேவையில்லை.

உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து பொங்கல் பரிசு தொகுப்பை முன் கூட்டியே வழங்கி வருகிறது அ.தி.மு.க. அரசு. மிசாவில் நான் இத்தனை நாள் சிறையில் இருந்தேன் என்று நானே சொல்வதற்கு எனக்கு வெட்கமாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 2 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்தானதற்கு அ.தி.மு.க. அரசு துணை போயிருக்கிறது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 2 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்தானதற்கு அ.தி.மு.க. அரசு துணை போயிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
2. தமிழகத்தில் கொலை - கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழகத்தில் கொலை - கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
3. ஒரே வாரத்தில் மாமல்லபுரத்தை சிங்கப்பூர் போல மாற்றியுள்ளனர் 8 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்காக எதையும் செய்யவில்லை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஒரே வாரத்தில் மாமல்லபுரத்தை சிங்கப்பூர் போல மாற்றியுள்ளனர். 8 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்காக எதையும் செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
4. தமிழக காவல்துறையில் 350 கோடி ரூபாய் ஊழல் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழக காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் வாங்கியதில் 350 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
5. எண்ணிக்கை சொல்கிறார்களே தவிர, நிறுவனங்களை சொல்லவில்லை: ‘புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக நாடகம் ஆடுகிறார்கள்’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
வெளிநாடு முதலீடுகளை ஈர்த்ததாக எண்ணிக்கை சொல்கிறார்களே தவிர, நிறுவனங்களின் பெயர்களை தமிழக அரசு வெளியிடவில்லை என்றும், புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக நாடகம் ஆடுகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.