தேசிய செய்திகள்

பா.ஜனதா பிரசாரம்: சமூக வலைதளங்களில் வைரலாகும் மோடி அரசின் சாதனைகள்! + "||" + The achievements of the Modi government are viral on social networks

பா.ஜனதா பிரசாரம்: சமூக வலைதளங்களில் வைரலாகும் மோடி அரசின் சாதனைகள்!

பா.ஜனதா பிரசாரம்: சமூக வலைதளங்களில் வைரலாகும் மோடி அரசின் சாதனைகள்!
மோடி அரசின் சாதனைகளை பா.ஜனதா சமூக வலை தளங்களில் பிரசாரம் செய்து வருகிறது.
புதுடெல்லி,

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட
அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி அறக்கட்டளை ஒன்றை அமைத்து ராமர்கோவில் கட்டப்படுகிறது. இது மோடி அரசின் சாதனையாக பா.ஜனதா கருதுகிறது. இதை வைத்து பா.ஜனதா சமூக வலை தளங்களில் பிரசாரம் செய்து வருகிறது.

இது தொடர்பாக சமூக வலை தளங்களில் பா.ஜனதா கூறியதாவது:

மோடி 2-வது முறையாக பதவியேற்ற 6 மாதத்தில் வியக்கத்தக்க பல சாதனைகளை படைத்துள்ளார். ராமர் கோவில் கட்டுவது மிகப் பெரிய சாதனையாகும்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை மசோதா, விவசாயிகளுக்கான சலுகை திட்டம், சுகாதாரத்திட்டம் ஆகியவை
மோடி அரசின் சாதனைகளாக கருதப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை வைத்து உ.பி.யில் நடைபெறும் இடைத்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் பிரசார உக்தியாக பயன்படுத்த பா.ஜனதா
திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.