மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு + "||" + Local election date to be announced tomorrow

உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு

உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு
உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,

மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

டிசம்பர் 7-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் உறுதியாக அறிவிக்கப்படும்.  டிசம்பர் முதல் வாரத்திற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தோம். அதன்படி  டிசம்பர் முதல் வாரம் முடிவதற்குள் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் முடிந்தால் நாளை கூட அறிவிப்பு வெளியாகலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

டிசம்பர் 2-ல் தேர்தல் தேதியை அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

டிசம்பர் 13-க்குள் தேர்தல் தேதியை அறிக்க வேண்டும் என ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி - கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு
உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பினை கலெக்டர் விஜயகார்த்தியேன் ஆய்வு செய்தார்.
2. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு 9,814 பேர் வேட்பு மனுதாக்கல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு 9 ஆயிரத்து 814 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
3. பழுதை சரிசெய்து தண்ணீர் வழங்காவிட்டால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
ஒக்கூர் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் உள்ள மின்மோட்டாரில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
4. நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில் உள்ளாட்சி வேட்மனு தாக்கல் விறுவிறுப்பு
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மனுத்தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது.
5. உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் பிரிக்கும் பணி தீவிரம்
உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்காக பிரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.