மாநில செய்திகள்

தொடர் மழை:சென்னையில் இரவு முழுவதும் கண்காணிப்பு பணி நடைபெறும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி + "||" + Surveillance work will take place all night in Chennai Uthayakumar

தொடர் மழை:சென்னையில் இரவு முழுவதும் கண்காணிப்பு பணி நடைபெறும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

தொடர் மழை:சென்னையில் இரவு முழுவதும் கண்காணிப்பு பணி நடைபெறும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
தொடர் மழை காரணமாக சென்னையில் இரவு முழுவதும் கண்காணிப்பு பணி நடைபெறும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகம் முழுவதும் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தொடர் மழை காரணமாக சென்னையில் இரவு முழுவதும் கண்காணிப்பு பணி நடைபெறும். கடலோர மாவட்டங்களில் சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தாழ்வான 2 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தாழ்வான 4 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் அவற்றை வெளியேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மழையால் பாதிக்கப்படும் 4,399 இடங்களில் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

மக்கள் அச்சப்படுகிற நிலை தற்போது இல்லை. 37 வருவாய் மாவட்டங்களிலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது. நீர்நிலைகளில் செல்பி மற்றும் புகைப்படம் எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். 

ஆற்றங்கரையோரம் இருக்க கூடியவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை இன்னும் தேவையான மழை பெய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மீட்பு பணிகளை மேற்கொள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது என தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், 21 கமாண்டோ தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மழை வெள்ள மீட்பு பணிகளுக்கு, 101 என்ற எண்ணில் தீயணைப்புத்துறையை தொடர்பு கொள்ளலாம். சென்னையில் உள்ளவர்கள், 044-28554309, 28554311, 28554313, 28554314, 28554376 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.