தேசிய செய்திகள்

பெண் டாக்டர் கற்பழித்து கொலை; பிரியங்கா கண்டனம் + "||" + Woman doctor raped and killed; Priyanka condemned

பெண் டாக்டர் கற்பழித்து கொலை; பிரியங்கா கண்டனம்

பெண் டாக்டர் கற்பழித்து கொலை; பிரியங்கா கண்டனம்
பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்டதற்கு பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஐதராபாத்தில் பெண் டாக்டரும், உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் சிறுமியும் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை அறிந்து நான் நிலைகுலைந்து விட்டேன். எனது கோபத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. இத்தகைய சம்பவங்கள் நடக்கும்போது, நாம் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதை தாண்டி பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சந்தேகம்: கோவை பெண் டாக்டர், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதி
கோவையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் கொரோனா வைரஸ் சந்தேகத்துடன் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2. 12 வயது சிறுமி கற்பழித்து கொலை; 7 மாணவர்கள் கைது
12 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.