தேசிய செய்திகள்

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களில் போபாலுக்கு முதலிடம் + "||" + Bhopal tops women's insecure cities

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களில் போபாலுக்கு முதலிடம்

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களில் போபாலுக்கு முதலிடம்
பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களில் போபாலுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
புதுடெல்லி,

பாதுகாப்பற்ற உணர்வு தொடர்பாக, பெண்களிடையே ‘சேப்டிபின்‘ என்ற சமூக நிறுவனமும், ஒரு தொண்டு நிறுவனமும் கருத்துக்கணிப்பு நடத்தின. இதில், மத்தியபிரதேச மாநிலம் போபால், குவாலியர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஆகிய நகரங்களை பாதுகாப்பற்ற நகரங்களாக உணர்வதாக 90 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்தனர்.


அந்த நகரங்கள், ஒதுக்குப்புறங்களும், பாதுகாப்பற்ற பகுதிகளும் நிறைந்தவை. காலியான பஸ், ரெயில்கள், போதைப்பொருள், மது விற்பனை ஆகியவற்றை பாதுகாப்பற்றதாக கருதுவதாக பெண்கள் தெரிவித்தனர். மாணவிகள், திருமணம் ஆகாத பெண்கள் ஆகியோர் பாலியல் தொல்லைக்கு அதிகம் இலக்காவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இரவில் தனியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு - உத்தரப்பிரதேச காவல்துறை அறிவிப்பு
இரவில் தனியாக செல்லும் பெண்கள் உதவி கோரினால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
2. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் மட்டுமே தீர்வு ஆகாது - வெங்கையா நாயுடு பேச்சு
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமே தீர்வாக இருக்காது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
3. பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை - ஆய்வில் தகவல்
பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை என ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. புதுக்கோட்டை அருகே சரக்கு வேன் மீது லாரி மோதியதில் 3 பெண்கள் பலி; 13 பேர் படுகாயம்
புதுக்கோட்டை அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது சரக்கு வேன் மீது லாரி மோதியதில் 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.
5. காப்பகத்தில் இருந்து அனுமதியின்றி சென்னைக்கு விமானத்தில் சென்று விட்டு 3 நாள் கழித்து திரும்பிய இளம்பெண்கள்
திருச்சி காப்பகத்தில் இருந்து அனுமதியின்றி சென்னைக்கு விமானத்தில் சென்று விட்டு 3 நாட்கள் கழித்து திரும்பிய இளம்பெண்களை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.