தேசிய செய்திகள்

இறந்தவருடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது; 6 பேர் பலி + "||" + 6 Killed as Ambulance and Truck Collide in Nepal

இறந்தவருடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது; 6 பேர் பலி

இறந்தவருடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது; 6 பேர் பலி
இறந்தவருடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கிய சம்பவத்தில் 6 பேர் பலியாகினர்.
காத்மாண்டு,

நேபாள நாட்டில் உதயபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவ மாயா. இவர் விராட்நகர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுடன் ஆம்புலன்சில் உறவினர்கள், வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.


வழியில், சன்சாரி மாவட்டத்தில் எதிரில் வந்த சரக்கு லாரியுடன் ஆம்புலன்ஸ் நேருக்குநேர் மோதியது. இதில், ஆம்புலன்ஸ் டிரைவரும், இறந்த சிவ மாயாவின் 2 மகன்கள் உள்பட 5 உறவினர்களும் உயிரிழந்தனர். சரக்கு லாரியின் டிரைவர் காயமடைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: வாலிபர் தலை நசுங்கி சாவு
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: வாலிபர் தலை நசுங்கி சாவு.
2. கும்பகோணத்தில் கிராம நிர்வாக அலுவலகங்களில் தீவிபத்து முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்
கும்பகோணத்தில் கிராம நிர்வாக அலுவலகங்களில் ஏற்பட்ட தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின.
3. சூடான் நாட்டுக்கு வேலைக்கு சென்ற நாகை வாலிபரின் கதி என்ன? தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ‘வீடியோ’ காட்சியால் உறவினர்கள் குழப்பம்
சூடான் நாட்டில் நடந்த தீ விபத்தில் நாகை வாலிபர் ஒருவர் பலியானதாக தகவல் வந்த நிலையில் அவர் விபத்து நடந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறுவது போன்ற ‘வீடியோ’ காட்சி அவருடைய சகோதரருக்கு கிடைத்துள்ளது.
4. கரூர் அருகே துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து; ரூ.20 கோடி மின்மாற்றி எரிந்து நாசம்
கரூர் அருகே புகளூரில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான மின்மாற்றி தீயில் எரிந்து நாசமடைந்தது.
5. பிரான்சில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி 3 பேர் சாவு
பிரான்சில் மீட்பு பணிக்காக சென்ற ஹெலிகாப்டர் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.