மாநில செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை; ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவிப்பு + "||" + Holiday for schools in Ranipet district; Collector Divyadarshini announced

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை; ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை; ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராணிப்பேட்டை,

தமிழகத்தில் கடந்த 28ந்தேதி முதல் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்ய தொடங்கியது.  வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சியால், மழை தீவிரமடைந்து உள்ளது.

பலத்த மழை காரணமாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தொடர் மழையால், நீலகிரி மாவட்டத்தில் குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில், தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.  இதனை ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
ராஜஸ்தானில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. அயோத்தி வழக்கு தீர்ப்பு; கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக கிருஷ்ணகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. தர்மபுரி மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆட்சியர் நாளை விடுமுறை அறிவித்து உள்ளார்.
5. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் மழை காரணமாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.