மாநில செய்திகள்

தமிழகத்தில் பருவமழை பாதிப்புகள் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை + "||" + CM Palanisamy discusses on monsoon rains in Tamil Nadu

தமிழகத்தில் பருவமழை பாதிப்புகள் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் பருவமழை பாதிப்புகள் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை
தமிழகத்தில் பருவமழை பாதிப்புகள் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது.  கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.  இதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.  பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவு மழைப்பதிவாகி உள்ளது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.  

கடலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.  அவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  கனமழை காரணமாக விருத்தாசலம் - கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.

கடலூரில் கனமழை காரணமாக பெரிய பட்டு மற்றும் பூச்சி மேடு இடையேயான தரைப்பாலம் உடைந்துள்ளது.  15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், பருவமழை பாதிப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்பத்திரியில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் நிதி மந்திரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை
ஆஸ்பத்திரியில் இருந்தபடியேகாணொலி காட்சிமூலம் நிதி மந்திரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
2. ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கான நிபந்தனைகள் குறித்து விசைத்தறி உரிமையாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை
ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கான நிபந்தனைகள் குறித்து விசைத்தறி உரிமையாளர்களுடன் கலெக்டர் ராமன் ஆலோசனை நடத்தினார்.
3. வாகன தணிக்கையின்போது காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் -முதலமைச்சர் பழனிசாமி
வாகன தணிக்கையின்போது காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
4. டி.டி.வி. தினகரன் மீது கடும் பாய்ச்சல்: அ.தி.மு.க.வில் ஆதரவாளர்களுடன் இணைகிறார் புகழேந்தி
அ.ம.மு.க.வை சேர்ந்த புகழேந்தி விரைவில் அந்த அமைப்பில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் இணைகிறார். அவர் டி.டி.வி. தினகரன் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.
5. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல் அமைச்சர் பழனிசாமி சந்திப்பு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வருகிறார்.