தேசிய செய்திகள்

விவசாயி என்றால் யார்? மத்திய அரசிடமே தெளிவான வரையறை இல்லை? + "||" + Who is a farmer? Government has no clear definition

விவசாயி என்றால் யார்? மத்திய அரசிடமே தெளிவான வரையறை இல்லை?

விவசாயி என்றால் யார்? மத்திய அரசிடமே  தெளிவான வரையறை இல்லை?
விவசாயி என்றால் யார்? என்று மத்திய அரசிடமே தெளிவான வரையறை இல்லை? இதனால் பிரதமரின் விவசாயிகள் நிதி உள்பட அவர்களுக்கு உதவ விரும்பும் திட்டங்களின் வடிவமைப்பு பயனாளிகளுக்கு கடுமையான பாதிப்பை கொடுக்கிறது.
புதுடெல்லி,

விவசாயி  என்றால் யார்? ஒரு விவசாயிக்கு அரசாங்கத்தின் வரையறை என்ன? அந்த வரையறைக்குள்  இந்தியாவில் எத்தனை விவசாயிகள் உள்ளனர்?  கடந்த வாரம் மாநிலங்களவையில் பாஜக எம்.பி. அஜய் பிரதாப் சிங்கால் கேட்கப்பட்ட கேள்விக்கு  விவசாய மந்திரி  நரேந்திர சிங் தோமரால் பதிலளிக்க  முடியவில்லை. மேலும் விவசாய  குடும்பங்களின் எண்ணிக்கையை அறிய ஏதேனும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதா? என்றும் கேட்டார். ஆனால் பதில் கொடுக்க முடியவில்லை.

இது குறித்த எழுத்துப்பூர்வமான பதிலில், விவசாயம்  மாநிலத்திற்குட்பட்ட விஷயம் என்று விவசாய மந்திரி  கூறினார். விவசாய நில உரிமையாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை அவர் வழங்கினார். மேலும் சாகுபடி செய்யக்கூடிய நிலங்களை வைத்திருக்கும் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும், அதாவது பிரதமரின் விவசாய நிதி திட்டத்தின் மூலம் மத்திய அரசு வருமான ஆதரவை வழங்குகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

அரசாங்கத்தின் இந்த தெளிவற்ற தன்மையால்  பிரதமரின் விவசாயிகள் நிதி உள்பட அவர்களுக்கு உதவ விரும்பும் திட்டங்களின் வடிவமைப்பு  பயனாளிகளுக்கு கடுமையான பாதிப்பை கொடுக்கிறது.

உண்மையில், விவசாயிகளுக்கான தேசிய கொள்கையில் தெளிவான மற்றும் விரிவான வரையறை உள்ளது. இது எம்.எஸ். சுவாமிநாதன்  தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டது. மாநிலங்களுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டில் இது மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

அந்த ஆணையத்தின் கொள்கை அறிக்கையில், விவசாயி என்ற சொல், பயிர்களை வளர்ப்பது மற்றும் பிற முதன்மை விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்வது ஆகியவற்றின் பொருளாதார மற்றும் / அல்லது வாழ்வாதார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஒரு நபரைக் குறிக்கும். மேலும் அனைத்து விவசாயம் சார்ந்த செயல்பாட்டு உரிமையாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், பங்குதாரர்கள், குத்தகைதாரர்கள், கோழி மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள், மீனவர்கள், தேனீ வளர்ப்பவர்கள், தோட்டக்காரர்கள், ஆயர்கள், கார்ப்பரேட் அல்லாத தோட்டக்காரர்கள் மற்றும் நடவுத் தொழிலாளர்கள், அத்துடன் பட்டு வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு மற்றும் வேளாண் வனவியல் போன்ற பல்வேறு விவசாய சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபடும் நபர்கள். பழங்குடி குடும்பங்கள் / சாகுபடியை மாற்றுவதில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் சிறு மற்றும் மரமற்ற வன விளைப்பொருட்களை சேகரித்தல், பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவையும் இந்த அட்டவணையில்  அடங்கும். 

அந்த விரிவான வரையறையைப் பயன்படுத்தி விவசாயிகளின் நிகர வருமானத்தை கணிசமாக அதிகரிக்கவும் அவர்களுக்கு ஆதரவு சேவைகளை உருவாக்கவும் இந்த கொள்கை வலியுறுத்துகிறது.

விவசாய விஞ்ஞானியும், உணவுக் கொள்கை நிபுணருமான தேவிந்தர் சர்மா கூறும் போது, 

ஒரு விவசாயியின் அடையாளத்தை நில உரிமையுடன் இணைப்பது மற்றொரு வகையில்  பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்துகிறது. சில ஆய்வுகள் 60% -70% விவசாயிகள் உண்மையில் பெண்கள் என்று மதிப்பிடுகின்றன, ஆனால், உரிமையாளர் ஆவணங்களில் அவர்களின் பெயர்கள் இருக்காது என்று குறிப்பிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது; கூடுதல் பாதுகாப்பு படையினர் வெளியேறத் தொடங்கினர்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.
2. காஷ்மீரில் இணைய தள முடக்கம் ஏன்? மத்திய அரசு விளக்கம்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
3. பெண்கள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் நிதியை பயன்படுத்த தவறிய மாநிலங்கள்
பெண்கள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் நிதியை பயன்படுத்த மாநிலங்கள் தவறிவிட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
4. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றது ஒரு நாடகம் : பாஜக தலைவர் கருத்தால் சலசலப்பு
ரூ. 40 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப நாடகம் அரங்கேற்றப்பட்டது என்று பாஜக தலைவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 2022ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டம்; மத்திய அரசு
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை வரும் 2022ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.