தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு!- சென்னை வானிலை ஆய்வு மையம் + "||" + In South Tamil Nadu Tomorrow, tomorrow and tomorrow
Heavy Rain! Chennai Meteorological Department
தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு!- சென்னை வானிலை ஆய்வு மையம்
தென் தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
சென்னை,
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை வலுவாக உள்ளது. தமிழகத்தில் 17 இடங்களில் கனமழை, 3 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது
தென்தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது
தென் தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
காவிரி டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை, அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் மேட்டுப்பாளையத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது. மன்னார்வளைகுடா கடல் பகுதிகளுக்கு தமிழக மீனவர்கள் செல்ல வேண்டாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று தென் தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும்.
சென்னையில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறினார்.
சென்னையில் வடகிழக்கு பருவ மழை 14 செமீ குறைவாக பெய்து உள்ளது. தமிழகம் முழுவதும் இயல்பை விட அதிகமாக பெய்து உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறினார்.