மாநில செய்திகள்

17 பேர் பலி; ரூ.4 லட்சம் நிவாரண தொகை அறிவிப்பு: முதல் அமைச்சர் நாளை கோவை பயணம் + "||" + 17 died in Kovai; Rs.4 lakhs of relief announced

17 பேர் பலி; ரூ.4 லட்சம் நிவாரண தொகை அறிவிப்பு: முதல் அமைச்சர் நாளை கோவை பயணம்

17 பேர் பலி; ரூ.4 லட்சம் நிவாரண தொகை அறிவிப்பு: முதல் அமைச்சர் நாளை கோவை பயணம்
கோவையில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை,

கோவையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் பருவமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கிராமத்தில் மழை காரணமாக 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

இந்த சம்பவத்தில் 7 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் வரை பலியாகி உள்ளனர்.  மழை பெய்து வீடுகள் இடிந்து விழுந்ததில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.  அவர்களின் உடல்கள் மண் மூடி  கிடந்துள்ளன.

இதன்பின் காலையில் அந்த வழியே சென்றவர்கள் இதுபற்றி அறிந்து தகவல் அளித்த பின்னரே போலீசார் அந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இந்த மீட்பு பணிகளில், காவல் துறையினருடன் தீயணைப்பு துறையினரும் இணைந்து ஈடுபட்டனர்.  இதில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.  

இதைத்தொடர்ந்து,  தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, சம்பவ பகுதிகளை நேரில் பார்வையிட்டு, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற கோவைக்கு நாளை செல்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிலியில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது - 38 பேரின் கதி என்ன?
சிலியில் 38 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்தவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
2. திருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது 2,500 பக்தர்கள் மட்டுமே மலை ஏற நிபந்தனைகளுடன் அனுமதி - கலெக்டர் அறிவிப்பு
மகா தீபத்தின்போது 2,500 பக்தர்கள் நிபந்தனைகளுடன் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
3. 6 மாத இலவச அரிசிக்கான பணம் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு
6 மாத இலவச அரிசிக்கான பணம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி அறிவித்தார்.
4. ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கும் 2 கட்டமாக தேர்தல் கலெக்டர் சி.கதிரவன் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் அறிவித்தார்.
5. எனது ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை; இலங்கை அதிபராக பதவி ஏற்ற கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு
எனது ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை என இலங்கை அதிபராக பதவி ஏற்ற கோத்தபய ராஜபக்சே அறிவித்து உள்ளார்.