தேசிய செய்திகள்

காங்கிரஸ் பேரணி; 'பிரியங்கா சோப்ரா வாழ்க' கோஷம்! தலைவர்கள் அதிர்ச்சி!! + "||" + Delhi: Priyanka Chopra zindabad! mistakenly raised by Congress' Surender

காங்கிரஸ் பேரணி; 'பிரியங்கா சோப்ரா வாழ்க' கோஷம்! தலைவர்கள் அதிர்ச்சி!!

காங்கிரஸ் பேரணி; 'பிரியங்கா சோப்ரா வாழ்க' கோஷம்! தலைவர்கள் அதிர்ச்சி!!
காங்கிரஸ் பேரணியில் பிரியங்கா காந்திக்கு பதிலாக 'பிரியங்கா சோப்ரா வாழ்க' என்ற கோஷம் கட்சி தலைவர்களிடம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பேரணி ஒன்று நடந்தது.  இதில் டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா கலந்து கொண்டார்.  இந்த பேரணியில் காங்கிரஸ் நிர்வாகியான சுரேந்தர் குமார், சோனியா காந்தி வாழ்க! காங்கிரஸ் கட்சி வாழ்க! ராகுல் காந்தி வாழ்க! என்ற கோஷம் எழுப்பினார்.  அவர் கோஷம் எழுப்ப, உடனிருந்த சுபாஷ் சோப்ராவும் அதற்கு இணையாக கோஷம் எழுப்பினார்.

திடீரென, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்திக்கு பதிலாக, பிரியங்கா சோப்ரா வாழ்க என்று சுரேந்தர் குமார் கோஷம் எழுப்பினார்.  இதனால் சுபாஷ் சோப்ரா அதிர்ச்சி அடைந்து திரும்பி அவரை பார்த்துள்ளார்.  அவரை சுற்றியிருந்தவர்களும் சிறிது நேரம் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியானதும் பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து உள்ளனர்.  இந்திய தேசிய காங்கிரசில் பிரியங்கா சோப்ரா உறுப்பினராக இருக்கிறார் என எங்களுக்கு ஒருபொழுதும் தெரியாது என்று ஒருவரும், பிரியங்கா சோப்ராவுக்கு வாழ்த்துகள் என மற்றொருவரும் டுவிட்டரில் தெரிவித்து உள்ளனர்.