தேசிய செய்திகள்

குஜராத்தில் நித்யானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டது + "||" + Nithyananda's ashram closed in Gujarat

குஜராத்தில் நித்யானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டது

குஜராத்தில் நித்யானந்தாவின் ஆசிரமம்  மூடப்பட்டது
பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டது.
ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தின் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. நித்யானந்தாவின் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், ஆசிரமத்தில் இருந்த சிலர் காணாமல் போனதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஆசிரமத்தில் போலீசார் சோதனை நடத்தினர். மேலும், ஆசிரமத்தை 3 மாதத்திற்குள் மூடக்கோரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பல்வேறு புகார்களை அடுத்து மாவட்ட நிர்வாகத்தால் நித்யானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டது. அந்த ஆசிரமத்தில் இருந்தவர்கள் பெங்களூருவில் உள்ள பிடதி ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குஜராத், தமிழகத்தில் அதிக அளவு போலீஸ் காவல் மரணங்கள்; யாருக்கும் தண்டனை இல்லை
குஜராத், தமிழ்நாட்டில் அதிக அளவு போலீஸ் காவலில் மரணங்கள் நிகழ்ந்து உள்ளன, ஆனால் இதில் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை.
2. பாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் பெண் போலீஸ் அதிகாரி கைது
பாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் பெண் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
3. குஜராத்தில் மேலும் 580 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 27,317 ஆக உயர்வு
குஜராத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,317 ஆக உயர்ந்துள்ளது.
4. குஜராத் முதல்வர் ஆலோசனையில் கலந்து கொண்ட எம்.எல்.ஏவுக்கு கொரோனா அறிகுறி
குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கொரோனா அறிகுறி;முதல்-அமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது .
5. காசோலையை அயன் செய்து கிருமி நீக்கம் செய்த வங்கி கேசியர்
காசோலையை அயன் செய்து கிருமி நீக்கம் செய்தார் வங்கி கேசியர் ஒருவர்