தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் + "||" + First Review Petition Filed In Supreme Court Against Its Ayodhya Verdict

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல்

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல்
அயோத்தி வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை, பல ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வந்தது. 

சமீபத்தில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், 'சர்ச்சைக்குரிய அந்த நிலத்தில், ராமர் கோவில் கட்டலாம்.  முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட, உத்தர பிரதேச அரசு, அயோத்தி பகுதியிலேயே , 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

இந்த நிலையில், அயோத்தி வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி,  இந்த வழக்கின் மூல மனுதாரர் எம்.சித்திக் என்பவரின் மகனும் ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவருமான மவுலானா சையத் அர்ஷ்ஹத் ரஷிதி  மனு தாக்கல் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பட்டாசு தயாரிப்புக்கு விதித்த தடையை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பட்டாசு தயாரிப்புக்கு விதித்த தடையை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
2. அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை - சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு
அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று சன்னி வக்பு வாரியம் முடிவு செய்துள்ளது.
3. அயோத்தி வழக்கின் தீர்ப்பு: பொறுமையை கையாண்ட மக்களுக்கு நன்றி - பிரதமர் மோடி வானொலியில் பேச்சு
அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியான பிறகு பொறுமையுடனும், முதிர்ச்சியுடனும் நடந்து கொண்ட நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4. அயோத்தி வழக்கில் சீராய்வு மனுவுக்கு சிறுபான்மையினர் ஆணையம் எதிர்ப்பு
அயோத்தி வழக்கில் சீராய்வு மனுவுக்கு சிறுபான்மையினர் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
5. மராட்டிய கவர்னருக்கு எதிராக 3 கட்சிகள் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஆளுநருக்கு பாஜக, அஜித்பவார் சமர்ப்பித்த கடிதத்தையும், ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநரின் கடிதத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.