மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக கோரிக்கை + "||" + Speaking of MK Stalin On Bt Arasakumar   take action Tamil Nadu BJP demands

மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக கோரிக்கை

மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக கோரிக்கை
மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசியதற்காக பாஜக துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க பாஜகவின் தேசிய தலைமைக்கு தமிழக பாஜக பரிந்துரை செய்து உள்ளது.
 சென்னை,

புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி. அரசகுமார் கலந்து கொண்டு  பேசும்பொழுது, எம்.ஜி.ஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின்.  அவர் நினைத்தால் கூவத்தூர் சம்பவத்தின் போதே முதல்வராகியிருக்க முடியும்.  ஆனால் அவர் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார்.  காலம் வரும், கட்டாயம் மு.க. ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆவார் என பேசினார்.

அவரது இந்த பேச்சு பா.ஜ.க.வினரிடையே சலசலப்பினை ஏற்படுத்தியது.  இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தனது பேச்சு குறித்து பேட்டி அளித்த பி.டி.அரசகுமார், என்னுடைய தனிப்பட்ட உணர்வுகளை நான் வெளிப்படுத்தினேன்.  மு.க. ஸ்டாலினை சாதாரணமாக தான் வாழ்த்தினேன்.  கட்சி தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதனை ஏற்க தயார் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் மு.க. ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கட்சி தலைமைக்கு  தமிழக பாஜக கடிதம் அனுப்பி உள்ளது.

தேசிய தலைமையில் இருந்து பதில் வரும் வரை கட்சி சார்பில் எந்த நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் பி.டி.அரசகுமார் கலந்துக்கொள்ள கூடாது என தமிழக பாஜக கூறி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டை அரசு முறையாக அறிவிக்கவில்லை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டை அரசு முறையாக அறிவிக்கவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
2. எடப்பாடி பழனிசாமியை போன்று மண்புழுபோல் ஊர்ந்து சென்று முதல்-அமைச்சராக மாட்டேன் மு.க.ஸ்டாலின் பேச்சு
நான் எடப்பாடி பழனிசாமியை போன்று மண்புழுபோல் ஊர்ந்து சென்று முதல்-அமைச்சராக மாட்டேன் என புதுக்கோட்டையில் நடைபெற்ற பெரியண்ணன் அரசு எம்.எல்.ஏ. இல்லத்திருமணவிழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
3. “உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவது தி.மு.க.வின் நோக்கமல்ல” மு.க.ஸ்டாலின் பேட்டி
‘உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவது தி.மு.க.வின் நோக்கமல்ல’, என்றும், ‘தி.மு.க. குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள்’ எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்றது ஏன்? தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
மராட்டியத்தில் நடந்த உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்றது ஏன்? என்பது குறித்து மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
5. ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாது: பாஜக சவால்
ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாது என்று பாஜக தெரிவித்துள்ளது.