தேசிய செய்திகள்

பிரியங்கா காந்தி இல்ல பாதுகாப்பில் குறைபாடு; அத்துமீறி சிலர் நுழைந்ததாக தகவல் + "||" + Security Breach At Priyanka Gandhi Home, Family Drove In, Asked For Photo

பிரியங்கா காந்தி இல்ல பாதுகாப்பில் குறைபாடு; அத்துமீறி சிலர் நுழைந்ததாக தகவல்

பிரியங்கா காந்தி இல்ல  பாதுகாப்பில் குறைபாடு; அத்துமீறி சிலர் நுழைந்ததாக தகவல்
பிரியங்கா காந்திக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு இசட் பிளஸ் பாதுகாப்பு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி, 

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவின் இல்லம்  டெல்லியில் உள்ள  லோதி எஸ்டேட் பகுதியில் உள்ளது. டெல்லியில் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்தில், முக்கிய பிரமுகர்கள் பலர் வசிப்பதால், எப்போதும்  பாதுகாப்பு கெடுபிடி அதிகமாக இருக்கும்.  இந்த நிலையில், பிரியங்கா காந்தியின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த சில நபர்கள், உரிய முன் அனுமதியின்றி அவருடன் செல்பி எடுக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த பாதுகாப்பு குறைபாடு கடந்த 25-ம்தேதி நடந்திருப்பதை பிரியங்கா காந்தியின் அலுவலகம் உறுதி செய்திருக்கிறது. மிக முக்கிய வி.ஐ.பி.க்களில் ஒருவரான பிரியங்கா காந்தியின் பாதுகாப்பில் குறைபாடு நேர்ந்திருப்பதை காங்கிரசார்  கண்டித்து  உள்ளனர். சமீபத்தில் தான் பிரியங்கா காந்திக்கு  வழங்கப்பட்டிருந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு, இசட் பிளஸ் பாதுகாப்பாக குறைக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. பிரியங்கா காந்தி இல்ல பாதுகாப்பில் குளறுபடி - விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமித்ஷா தகவல்
பிரியங்கா காந்தியின் இல்லத்திற்குள் அத்துமீறி 5 பேர் நுழைந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
2. பாஜக அரசு விற்பனை செய்வதில் திறமையானது, உருவாக்குவதில் அல்ல - பிரியங்கா காந்தி
பாஜக அரசு விற்பனை செய்வதில் திறமையானது, உருவாக்குவதில் அல்ல என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
3. ப.சிதம்பரத்தை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நாளை சந்திக்கின்றனர்
டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நாளை சந்திக்கின்றனர்.
4. வேலைவாய்ப்பின்மை பா.ஜ.க. ஆட்சியில் தொற்று நோய் போல் உருவெடுத்து உள்ளது; பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
நாட்டில் பா.ஜ.க. ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை தொற்று நோய் போல் உருவெடுத்து உள்ளது என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
5. பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் ‘காமெடி சர்க்கஸ் நடத்தக்கூடாது’ - மத்திய அரசுக்கு பிரியங்கா கடும் தாக்கு
மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரி்ல் கருத்து தெரிவித்துள்ளார்.