மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை : தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு + "||" + Northeast Monsoon: In 27 districts of TamilNadu Groundwater level rise

வடகிழக்கு பருவமழை : தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

வடகிழக்கு பருவமழை : தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,

மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் கடந்தாண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது தெரியவந்துள்ளது. அதாவது கடந்தாண்டை காட்டிலும் 1 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், பருவமழை கைகொடுத்ததால் மானாவாரி பயிர்கள் விளைச்சல் அமோகம்
வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி பயிர்களின் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2. வடகிழக்கு பருவமழை தீவிரம்: கொடைக்கானலுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் வருகை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி கொடைக்கானலுக்கு மீட்புகுழுவினர் வந்துள்ளனர்.
3. வடகிழக்கு பருவமழை தீவிரம்; தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அதிக மழைப்பதிவு
தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவு மழைப்பதிவாகி உள்ளது.
4. அடுத்த வார இறுதியில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடையும் - வானிலை நிபுணர்கள்
அடுத்த வார இறுதியில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடையக்கூடும் என்றும் இதனால் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர் மட்டத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
5. வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் மாவட்டத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - ஆராய்ச்சி நிலையம் தகவல்
வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் நாமக்கல் மாவட்டத்தின் சில இடங்களில் சிறு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.