மாநில செய்திகள்

சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம், போலீசார் தடியடி + "||" + Tamil Nadu: 17 killed in Coimbatore as 3 houses collapse due to heavy rain

சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம், போலீசார் தடியடி

சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம், போலீசார் தடியடி
மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 17 பேரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி  கன்னியாகுமரி  மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் வீடுகள் உள்ளது. நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் அங்குள்ள குடியிருப்பின் பின்பக்க காம்பவுண்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அந்த சுவர் 4  ஓட்டு வீடுகளின்  மீது  வரிசையாக விழுந்தது. அங்கு தூங்கி கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். அவர்கள்  சுதாரித்து எழுவதற்குள்  வீட்டின் சுவர் விழுந்து அமுக்கியது. இதனால் சிறுவன், சிறுமி உள்பட  17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், உடல்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். 

 இந்த நிலையில்,  உயிரிழந்தோருக்கான நிவாரணத்தை 25 லட்சமாக உயர்த்தி வழங்கவும் விபத்துக்கு காரணமான சுற்றுச்சுவரை கட்டியவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்,  இறந்த 17 பேரின்  உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

அப்போது, போலீசார் மற்றும் போராட்டக்காரர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு
உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.