மாநில செய்திகள்

வீடு இடிந்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு + "||" + Edappadi Palanisamy directs Rs 4 lakhs per family who died in wall Fell

வீடு இடிந்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

வீடு இடிந்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட நடூர் கிராமத்தில், வீடுகள் இடிந்து மிகப்பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
சென்னை, 

கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட நடூர் கிராமத்தில் ,  வீடுகள் இடிந்து மிகப்பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, இன்று அதிகாலை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், நடூர் கிராமத்தில் மூன்று வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில் குரு, ராம்நாத், ஆனந்த்குமார், ஹரிசுதா, சிவகாமி, ஓவியம்மாள், நதியா, வைதேகி, திலகவதி, அருக்காணி, ருக்மணி, நிவேதா, சின்னம்மாள் மற்றும் சிறுமி அக்‌ஷயா, சிறுவன் லோகுராம் உள்பட 17 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக குறிப்பிட்டு உள்ளார்.

பலத்த மழை காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மேற்படி 17 பேரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.வுக்கு ‘தில்’ இருக்கிறது; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.வுக்கு தில் இருக்கிறது என்றும், தேர்தலை கண்டு மு.க.ஸ்டாலின் அஞ்சுகிறார் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
2. கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
அதிக அளவில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
3. தமிழ்நாட்டில் புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி: பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி
தமிழ்நாட்டில் புதிதாக 3 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்காக பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
4. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்க ரூ.2,363 கோடி ஒதுக்கீடு; தமிழக அரசு உத்தரவு
அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்காக ரூ.2,363 கோடி தொகையை அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
5. மறைமுகத் தேர்தலுக்கான சட்டத்தை அமல்படுத்திய ஸ்டாலினே அதனை எதிர்ப்பது விந்தையாக உள்ளது - முதல்வர் பழனிசாமி
மறைமுகத் தேர்தலுக்கான சட்டத்தை அமல்படுத்திய ஸ்டாலினே அதனை எதிர்ப்பது விந்தையாக உள்ளது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.