தேசிய செய்திகள்

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றம் + "||" + Parliament passes Bill to ban e-cigarettes

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

சிகரெட், பீடி போன்றவற்றுக்கு மாற்றாக உலக அளவில் இ-சிகரெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. தொடக்கத்தில் அதிக ஆபத்தில்லாதவை எனக் கூறப்பட்டாலும், பல்வேறு ஆய்வுகளின் முடிவில், புகையிலை சிகரெட்டுக்கு நிகரான தீங்குகள் இந்த இ-சிகரெட்டாலும் ஏற்படும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இ-சிகரெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் நாடு முழுவதும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில், கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், மாநிலங்களவையில் இன்று  இ- சிகரெட்டிற்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. 

இந்த மசோதா இனி ஜனாதிபதி   ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவர் கையொப்பம் பெற்ற பின் சட்டமாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்றத்தில் ஜாலியன்வாலா பாக் நினைவிட மசோதா நிறைவேறியது - அறக்கட்டளையில் இருந்து காங். தலைவர் நீக்கம்
நாடாளுமன்றத்தில் ஜாலியன்வாலா பாக் நினைவிட மசோதா நிறைவேறியது. அதன் அறக்கட்டளையில் இருந்து காங்கிரஸ் தலைவர் நீக்கப்பட்டார்.
2. பரூக் அப்துல்லா எங்கே? பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடியதும், பரூக் அப்துல்லாவை விடுவிக்க வேண்டும் எனக்கோரி எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
3. நீட் தேர்வு ரத்து மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலை பெறுக - மு.க.ஸ்டாலின் அறிக்கை
தமிழக சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
4. ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
ஜம்மு காஷ்மீரை 2-ஆக பிரிக்கும் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
5. தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.3½ லட்சம் மோசடி; கோபியை சேர்ந்த ஊழியருக்கு வலைவீச்சு