உலக செய்திகள்

ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரம்: தேவாலயத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 14 பேர் பலி + "||" + Burkina Faso church attack leaves 14 people dead

ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரம்: தேவாலயத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 14 பேர் பலி

ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரம்: தேவாலயத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 14 பேர் பலி
ஆப்பிரிக்க நாட்டில் தேவாலயத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலியாகினர்.
வாகடூகு,

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினோ பாசோவில் ஐ.எஸ். மற்றும் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்கள் அப்பாவி மக்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் ஹன்டோவ்கவ்ரா நகரில் உள்ள தேவாலயத்தில் நேற்று முன்தினம் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.


அப்போது தேவாலயத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர்.

ஆனாலும் அந்த பயங்கரவாதிகள் சிறிதும் ஈவுஇரக்கமின்றி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையே தேவாலயத்தில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய பயங்கரவாதிகள் வழியில் இருந்த பாதுகாப்பு படையினரின் சோதனை சாவடிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புபடை அதிகாரிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் -ஐநா அறிக்கை
கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் என ஐநா பயங்கரவாத கண்காணிப்பு அமைப்பு தகவல்தெரிவித்து உள்ளது.
2. பெற்றோரை கொலை செய்த பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற சிறுமிக்கு பாராட்டு
ஆப்கானிஸ்தானில் இரண்டு தலிபான் பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
3. பஞ்சாபில் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக 9 பேரை இந்தியா பயங்கரவாதிகள் என அறிவிக்கிறது
கடந்த ஆண்டு திருத்தப்பட்ட இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் பஞ்சாபில் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரை இந்தியா பயங்கரவாதிகள் என அறிவிக்க உள்ளது.
4. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து -டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதால், டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
5. காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.