தேசிய செய்திகள்

பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் - ராஜ்நாத் சிங் தகவல் + "||" + Hyderabad Tragedy: Strict Laws To Prevent Sexual Offenses - Rajnath Singh Info

பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் - ராஜ்நாத் சிங் தகவல்

பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் - ராஜ்நாத் சிங் தகவல்
பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றத் தயார் என மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (வயது 27), 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொடிய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் கடந்த 29-ந் தேதி கைது செய்யப்பட்டு விட்டனர். அவர்கள் மாஜிஸ்திரேட்டு முன்பாக கடந்த சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் லாரி டிரைவர்கள், 2 பேர் அவர்களின் உதவியாளர்கள் ஆவார்கள். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 டி (கும்பல் கற்பழிப்பு), 302 (கொலை), 201 (ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. அதில் சமாஜ்வாதி  பெண் எம்.பியான ஜெயா பச்சன், அதிமுக எம்.பி. விஜிலா சத்தியானந்த் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்களும் இந்தப் பிரச்சினையை எழுப்பி கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர்.

இதுகுறித்து பதில் அளித்து பேசிய மத்திய  பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், “ஐதராபாத்தில் கால்நடை மருத்துவரைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது நமது நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவர்கள் செய்த குற்றத்திற்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், அகற்றவும், முழு சபையும் ஒப்புக் கொள்ளும் மாதிரியான சட்டத்தை உருவாக்க நாங்கள் தயாராக உள்ளோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் மூலம் 4 பேர் சுட்டுக்கொலை: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
ஐதராபாத் புறநகர் பகுதியில் போலீஸ் ‘என்கவுண்ட்டர்’ மூலம் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது.
2. 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
3. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: ஐதராபாத்தில் பெண் டாக்டரை கற்பழித்து கொன்ற குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை
ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேர், போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. ஐதராபாத் என்கவுண்ட்டர்: தலைவர்கள் கருத்து
ஐதராபாத் ‘என்கவுண்ட்டர்’ சம்பவம் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
5. ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு குஜராத் தொழில் அதிபர் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு
ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு, குஜராத் தொழில் அதிபர் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.