தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்தேன் - சரத்பவார் பரபரப்பு பேட்டி + "||" + "PM Modi Wanted Us To Work Together, Said Not Possible": Sharad Pawar

பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்தேன் - சரத்பவார் பரபரப்பு பேட்டி

பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்தேன் - சரத்பவார் பரபரப்பு பேட்டி
பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்ததாக சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மும்பை,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி ஒன்றாக இணைந்து செயல்பட (மராட்டியத்தில் ஆட்சியமைக்க) எனக்கு அழைப்பு விடுத்தார். அவரிடம் நான், நமது தனிப்பட்ட உறவு நல்லமுறையில் இருக்கிறது. அது அப்படியே தொடர வேண்டும். ஆனால் ஒன்றிணைந்து செயல்படுவது சாத்தியமற்றது என கூறிவிட்டேன். பா.ஜனதாவை ஆதரித்தால் என்னை ஜனாதிபதி ஆக்குவதற்கு மோடி முன்வந்ததாக கூறப்படும் செய்தியில் உண்மை இல்லை. ஆனாலும் மத்திய மந்திரிசபையில் எனது மகள் சுப்ரியா சுலேவை இணைத்துக்கொள்ள நிச்சயமாக வாய்ப்பு இருந்தது. அஜித்பவாரின் நடவடிக்கைக்கு எனது ஆதரவு இல்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் தெரியவந்தவுடன் அவருடன் இருந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் திரும்பி வந்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கார்டோசாட்-3 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
2. அரசியல் சட்டம் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு - நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டதன் 70-வது ஆண்டு தின விழாவையொட்டி நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, அரசியல் அமைப்பு நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்கு போன்றது என கூறினார்.
3. பிரதமர் மோடி குறிப்பிட்ட பாரதியார் பாடல்
பிரதமர் மோடி ‘மன் கி பாத்‘ உரையில் பாரதியார் பாடலை குறிப்பிட்டு பேசினார்.
4. அரசியலுக்கு வரும் ஆசை எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை - பிரதமர் மோடி
அரசியலுக்கு வரும் ஆசை தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
5. பிரதமர் மோடி மீது அவதூறு: ராகுல் காந்திக்கு எதிரான மனு தள்ளுபடி - டெல்லி கோர்ட்டு உத்தரவு
பிரதமர் மோடி மீது அவதூறு தெரிவித்த வழக்கில், ராகுல் காந்திக்கு எதிரான மனு தள்ளுபடி செய்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.