தேசிய செய்திகள்

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் - தாக்குதலுக்கு ஆளான பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு + "||" + The women who go to Sabarimala should be given protection - Woman charged with assault case Supreme Court

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் - தாக்குதலுக்கு ஆளான பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் - தாக்குதலுக்கு ஆளான பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என தாக்குதலுக்கு ஆளான பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
புதுடெல்லி,

சபரிமலை அய்யப்பன் கோவில் வழக்கு தொடர்பான மறுஆய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து என்ற பெண், சபரிமலை கோவிலுக்கு செல்ல தனக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவரை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி, அவர் மீது ‘பெப்பர் ஸ்பிரே’ அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக பிந்து தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சபரிமலை தீர்ப்பை செயல்படுத்த கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அனைத்து வயது பெண்களும் சபரிமலை சென்று வர உரிய பாதுகாப்பு வழங்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சபரிமலை செல்லும் பெண்களை தடுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும் 2018-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பீகாரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு ஆயுதமேந்திய காவலர்கள் பாதுகாப்பு
பீகாரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு ஆயுதமேந்திய காவலர்களின் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
2. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம் சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விமானநிலையத்தில் வாகன சோதனை மும்முரமாக நடத்தப்படுகிறது.
3. மண்டல, மகரவிளக்கு சீசனுக்குசபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி -கேரள மந்திரி தகவல்
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் கூறினார்.
4. நாகர்கோவிலில் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு
நாகர்கோவிலில் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு.
5. கொரோனா தடுப்பு பணி: பாதுகாப்புடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் - சரத்குமார் வேண்டுகோள்
கொரோனா தடுப்பு பணியில் பாதுகாப்புடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.