சினிமா செய்திகள்

ரஜினிகாந்துடனான சந்திப்பு : நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை - பிரணவ் நெகிழ்ச்சி + "||" + Meeting with Rajinikanth: I never expected to dream Pranav elasticity

ரஜினிகாந்துடனான சந்திப்பு : நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை - பிரணவ் நெகிழ்ச்சி

ரஜினிகாந்துடனான சந்திப்பு : நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை - பிரணவ் நெகிழ்ச்சி
'ரஜினிகாந்துடனான சந்திப்பு' இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை என மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ் கூறி உள்ளார்.
சென்னை,

கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, பேரிடர் நிவாரண நிதி வழங்கிய மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ், அவருடன் செல்பி எடுத்ததன் மூலம் பிரபலமானார்.

ரஜினியை சந்திக்க ஆசைப்படுவதாக பிரணவ் தகவல் வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து ரஜினிகாந்தை, பிரணவ் சந்திக்க கராத்தே தியாகராஜன் ஏற்பாடு செய்தார். 

நேற்று மாலை 5.30 மணியளவில் ரஜினியை, அவரது வீட்டில் பிரணவ் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, ரஜினிக்கு தான் வரைந்த ஓவியத்தைப் பரிசாக வழங்கினார் பிரணவ்.

பிரணவின் காலை, தனது கையால் பிடித்துக் குலுக்கி, கட்டிப்பிடித்தார் ரஜினி. சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பில் தனது லட்சியம், கனவு, குடும்பம் போன்றவை தொடர்பாகவும் ரஜினியிடம் பேசினார் பிரணவ். 

இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள பிரணவ்,  வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணத்தில் இருக்கிறேன். உலகத்தின் ஒரே சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தை சந்தித்துள்ளேன். எனக்கு பொன்னாடை போர்த்தினார். என் காலைப்பிடித்து குலுக்கினார், கட்டிப்பிடித்தார், செல்பி எடுத்தார், எனக்கு எப்போதும் துணையாக இருப்பேன் என்றார். இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை என பிரணவ் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மகனுடன் படகு சவாரி சென்ற நடிகை மாயம்; தற்கொலை செய்திருக்கலாம் என அச்சம்
4 வயது மகனுடன் படகு சவாரி சென்ற நடிகை மாயம்; தற்கொலை செய்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
2. நடிகர் சுஷாந்த் சிங் மரணம்: காதலியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில், அவரது காதலியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
3. நகைச்சுவை நடிகர்‘கும்கி’ அஸ்வின் காதல் திருமணம்- பட்டதாரி பெண்ணை மணக்கிறார்
கும்கி’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர், அஸ்வின்.
4. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் நிறைவேறாத ஆசைகள்
நடிகர் சுஷாந்த் சிங்கிற்கும் வாழ்வில் 50 ஆசைகள் இருந்துள்ளது. ஆனால் அவை முழுமையாக நிறைவேறுவதற்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
5. கொரோனா பாதிப்பு: டாக்டர்கள், நர்சுகள் ஓய்வெடுக்க 6 மாடி ஓட்டலை வழங்கிய நடிகர்
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் ஓய்வெடுக்க 6 மாடி ஓட்டலை நடிகர் சோனு சூட் வழங்கி உள்ளார்.