தனிநபர் வருமான வரி விகிதத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் -நிர்மலா சீதாராமன் + "||" + FM Nirmala Sitharaman to review personal income tax rates, says open to further reforms
தனிநபர் வருமான வரி விகிதத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் -நிர்மலா சீதாராமன்
தனிநபர் வருமான வரி விகிதத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்திருக்கிறார்.
புதுடெல்லி
மக்களவையில், பெருநிறுவன வரி விகித மாற்றம் தொடர்பான சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது;-
வளர்ந்த, வளரும் நாடுகளில் உள்ள வரிமுறைகளை கணக்கிட்டு, உள்நாட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க கோருவது என்பது சரியாக இருக்காது. அவை வேறு, நமது நாட்டின் வரிமுறைகள் வேறு.
அரசாங்கம், பொருத்தமான நேரத்தில் இது குறித்து நடவடிக்கை எடுக்கும். தனிநபர்களுக்கான வரி சலுகைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பாய்வு செய்யப்படும்.
அந்நிய முதலீடுகளை ஈர்த்து, நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் தான், கார்ப்பரேட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. அவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.