இந்தியாவின் பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
புதுடெல்லி,
வரிவிதிப்பு சட்ட திருத்த மசோதா குறித்து நேற்று மக்களவையில் நடந்த விவாதத்தில், பாஜக பாராளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே பேசும்போது, பொருளாதாரத்துக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் (ஜிடிபி) எந்த சம்பந்தமும் இல்லை, அதை ‘பைபிள், ராமாயணம் மற்றும் மகாபாரதம்’ என்று கருதக்கூடாது என கூறினார்.
இதற்கு பதில் அளித்து, சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் செய்துள்ள ட்விட்டில்,
“மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எதும் சம்பந்தம் இல்லை, தனிப்பட்ட வரி குறைக்கப்படும், இறக்குமதி வரி அதிகரிக்கப்படும். இவை பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றிய பாஜகவின் கருத்துக்கள். இந்தியாவின் பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என கூறி உள்ளார்.
GDP numbers are irrelevant, personal tax will be cut, import duties will be increased.
நாட்டில் நிலவும் பொருளாதாரம் குறித்து வழக்கத்திற்கு மாறாக பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டினார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், குற்றத்தின் தீவிரத்தன்மை என்று சொல்லி ப.சிதம்பரத்தை தொடர்ந்து சிறையில் வைப்பதா? என்று சுப்ரீம் கோர்ட்டில் அவரது வக்கீல் வாதாடினார்.