தேசிய செய்திகள்

பாஜக அரசு விற்பனை செய்வதில் திறமையானது, உருவாக்குவதில் அல்ல - பிரியங்கா காந்தி + "||" + BJP skilled at selling, not creating: Priyanka Gandhi Vadra

பாஜக அரசு விற்பனை செய்வதில் திறமையானது, உருவாக்குவதில் அல்ல - பிரியங்கா காந்தி

பாஜக அரசு விற்பனை செய்வதில் திறமையானது, உருவாக்குவதில் அல்ல - பிரியங்கா காந்தி
பாஜக அரசு விற்பனை செய்வதில் திறமையானது, உருவாக்குவதில் அல்ல என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி,

பாராளுமன்றத்தில்,  நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்திய  ஆடிட்டர் ஜெனரல் (சிஏஜி) அறிக்கையில், ரெயில்வே  துறை 2017-18 ஆம் ஆண்டில் 98.44 சதவீத இயக்க விகிதத்தை பதிவு செய்துள்ளது. இது முந்தைய 10 ஆண்டுகளில் மிக மோசமானது என சுட்டிக்காட்டி உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி,  பாரதீய ஜனதா விற்பனை செய்வதில் திறமையானது, ஆனால் எதையும் உருவாக்கும் திறமையானது கிடையாது என கூறி உள்ளார்.

இது குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-

இந்திய ரெயில்வே துறை  நாட்டின் உயிர்நாடியாகும். இப்போது, பாஜக அரசு ரெயில்வே துறையை மோசமான நிலைக்கு கொண்டு வந்துள்ளது. சில நாட்களுக்குப் பிறகு, மற்ற அரசு நிறுவனங்களைப் போலவே, ரெயில்வே துறையையும்  விற்பனை செய்யத் தொடங்கும். இந்த அரசு விற்பனை செய்வதில் திறமையானது, உருவாக்குவதில் அல்ல என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரேப் இன் இந்தியா என்று பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பெண் எம்பிக்கள் அமளி
ரேப் இன் இந்தியா என்று பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாரதீய ஜனதா பெண் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
2. என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள் - ப.சிதம்பரம்
பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது என்று ப.சிதம்பரம் விமர்சித்தார்.
3. சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்து ஒருவாரம் ஆகியும் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கவில்லை: பா.ஜனதா கண்டனம்
சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்து ஒருவாரம் ஆகியும் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கவில்லை என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
4. பிரியங்கா காந்தி இல்ல பாதுகாப்பில் குளறுபடி - விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமித்ஷா தகவல்
பிரியங்கா காந்தியின் இல்லத்திற்குள் அத்துமீறி 5 பேர் நுழைந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
5. பிரியங்கா காந்தி இல்ல பாதுகாப்பில் குறைபாடு; அத்துமீறி சிலர் நுழைந்ததாக தகவல்
பிரியங்கா காந்திக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு இசட் பிளஸ் பாதுகாப்பு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.