தேசிய செய்திகள்

இந்திய கடற்படைக்கு மேலும் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவை - கடற்படை தளபதி + "||" + India needs three aircraft carriers, says Navy Chief

இந்திய கடற்படைக்கு மேலும் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவை - கடற்படை தளபதி

இந்திய கடற்படைக்கு மேலும் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவை - கடற்படை தளபதி
இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவைப்படுவதாக விமானப்படை தளபதி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கடற்படை தினம் டிசம்பர் 4 ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் இன்று கடற்படை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது இந்திய கடற்படை தளபதி கரம்பீர் சிங் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவைப்படுவதாக கூறினார்.

“இந்திய கடற்படைக்கு மேலும் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவைப்படுகிறது. இதன் மூலம் இரண்டு கப்பல்கள் எந்நேரமும் செயல்பாட்டில் இருக்குமாறு நாம் பார்த்துக் கொள்ள முடியும்.

மேலும் அவை 65,000 டன் எடையுடன், மின்காந்த உந்துவிசை கொண்ட கப்பல்களாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருவதாகவும், அதனை இந்திய கடற்படை தொடர்ந்து முறியடித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 80,472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 80,472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 83 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 83 சதவீதமாக உயர்ந்துள்ளது.
3. இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 70,589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 70,589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5. இந்தியாவில் இயல்பை விட 9 சதவீதம் மழை பெய்துள்ளது - இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்தியாவில் இயல்பை விட 9 சதவீதம் அதிகமான மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...