தேசிய செய்திகள்

'ஆன்லைன் கேம்கள்' தடை செய்யப்பட வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் + "||" + Online games should be banned, the adveresely affect children's health: Congress MP

'ஆன்லைன் கேம்கள்' தடை செய்யப்பட வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார்

'ஆன்லைன் கேம்கள்' தடை செய்யப்பட வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார்
குழந்தைகளின் மனநலத்தை பாதிக்கும் 'ஆன்லைன் கேம்கள்' தடை செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

மாநிலங்களவையில் இன்று , கன்னியாகுமரி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் பேசும்போது, 'ஆன்லைன் கேம்கள்' தடை செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

மாநிலங்களவையில்  காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் பேசும்போது, 

“குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மனநலத்தை பாதிக்கும் ஆன்லைன் கேம்களான ப்ளூ வேல், பப்ஜி மற்றும் ரம்மி உள்ளிட்டவற்றை தடை செய்ய வேண்டும். 

பப்ஜி என்று அழைக்கப்படும் ஆன்லைன் விளையாட்டு 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 20 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த விளையாட்டு வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதால், ஏற்கனவே இந்தியாவின் சில நகரங்களில் இது தடை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய ஆன்லைன் கேம்களால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாக பல பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இது போன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகும் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சினைகள் வருகின்றன. இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்காக 'ஆன்லைன் கேம்'களை தடை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு தடை விதிக்கக்கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
2. தேர்தல் நிதி பத்திரங்களுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
தேர்தல் நிதி பத்திரங்களுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
3. கிரு‌‌ஷ்ணகிரியில் தர்பார் பட சிறப்பு காட்சிக்கு தடை போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவு
கிரு‌‌ஷ்ணகிரியில் தர்பார் பட சிறப்பு காட்சிக்கு தடை விதித்து போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
4. அமெரிக்காவில் இ-சிகரெட்டுக்கு தடை
அமெரிக்காவில் குறிப்பிட்ட வகை இ-சிகரெட்டுகளுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
5. திமுக பேரணிக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
சென்னையில் நாளை நடைபெற உள்ள திமுக தோழமைக் கட்சிகளின் பேரணிக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.