மாநில செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்பு: நிவாரணம் கிடைத்தாலும் இழப்பை ஈடுசெய்ய முடியாது- கமல்ஹாசன் + "||" + 17 killed in Mettupalayam Despite the relief The loss cannot be offset-Kamal

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்பு: நிவாரணம் கிடைத்தாலும் இழப்பை ஈடுசெய்ய முடியாது- கமல்ஹாசன்

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்பு: நிவாரணம் கிடைத்தாலும் இழப்பை ஈடுசெய்ய முடியாது-  கமல்ஹாசன்
மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நிவாரணம் கிடைத்தாலும் இழப்பை ஈடுசெய்ய முடியாது என கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
சென்னை,

கோவை மேட்டுப்பாளையத்தில் கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்தநிலையில் 17 பேரை பலிகொண்ட சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-

கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். இது ஒரு விபத்தென்றாலும், இதில் ஏதேனும் தவறு நடந்திருக்குமாயின், அரசும், காவல்துறையும் நேர்மையுடன் அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

எத்தனை நிவாரணம் கிடைத்தாலும் இந்த இழப்பை ஈடு செய்ய இயலாது. வரும் காலங்களில் மக்கள் கவனத்துடனும், அரசு முன்னெச்சரிக்கையுடனும் இருந்து, பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கூறி உள்ளார்.