தேசிய செய்திகள்

பசிக்கொடுமையினால் மண்ணை அள்ளித் தின்ற குழந்தைகள்: வைரலான வீடியோ; சுதாரித்த அரசு + "||" + Hunger forces Kerala mother to surrender children to the State

பசிக்கொடுமையினால் மண்ணை அள்ளித் தின்ற குழந்தைகள்: வைரலான வீடியோ; சுதாரித்த அரசு

பசிக்கொடுமையினால் மண்ணை அள்ளித் தின்ற குழந்தைகள்: வைரலான வீடியோ; சுதாரித்த அரசு
வறுமை காரணமாக, பசியினால் குழந்தைகள் மண்ணை அள்ளித் தின்ற கொடுமை அரங்கேறியுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் அங்குள்ள ரெயில்வே புறம்போக்கு நிலத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து வசித்து வருகிறார். அவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். ஆனால், கிடைக்கும்  பணத்தை  குடித்தே  காலியாக்கி விடுவார், மனைவியிடம் பணம் கொடுப்பதில்லை. இதனால் ஸ்ரீதேவி  6 குழந்தைகளை வைத்து கொண்டு அவர்களுக்கு உனவு வழங்க முடியாமல்  தவித்து வந்தார். இந்த நிலையில் குழந்தைகளுக்கு  உணவு கிடைக்காததால்  பசியில் குழந்தைகள் மண்ணை அள்ளித் தின்ற வீடியோ சமுக வலைத்தளங்களில் பரவியது. 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட நிர்வாகம், ஸ்ரீதேவியை சந்தித்து தேவையான உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது. தன்னார்வலர்களும் நேரில் சந்தித்து தேவையான பொருட்களை வழங்கியுள்ளனர்.

குழந்தைகள் நலக்குழு ஏற்கனவே 4 குழந்தைகளை மீட்டு, காப்பகத்தில் சேர்த்துள்ளது. எஞ்சியுள்ள 2 குழந்தைகளுக்கு தாயின் உதவி தேவைப்படுவதால் தாயுடன் அந்த குழந்தைகள் மாநில அரசின் கீழ் இயங்கும் ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோன்று ஸ்ரீதேவிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் வேலைக்கான நியமனக் கடிதத்தை மேயர் ஸ்ரீகுமார் வழங்கியுள்ளார். 

விரைவில், அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அவருக்கு வீடு ஒன்று கட்டிக் கொடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோன்று குழந்தைகளின் கல்விக்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.