தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் என்.ஆர்.சிக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது: மம்தா பானர்ஜி + "||" + l. You cannot implement NRC on the basis of caste and religion Says Mamtha

மேற்கு வங்காளத்தில் என்.ஆர்.சிக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது: மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் என்.ஆர்.சிக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது: மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் என்.ஆர்.சிக்கு ஒரு போதும் அனுமதி கிடையாது என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
கொல்கத்தா,

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) பட்டியல் அசாமில்  சமீபத்தில் தயாரிக்கப்பட்டது. அசாமிற்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய வெளிநாட்டவர்களை கண்டறியும் நோக்கில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்தப்பட்டியலில் விடுபட்டவர்கள் வெளிநாட்டு தீர்ப்பாயத்திடம் முறையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசார  பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும். அதன்பின்னர் இந்தியாவுக்குள் ஊடுருவிய ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு  வெளியேற்றப்படுவார்கள். அவர்களை வெளியேற்றாதீர்கள், அவர்கள் எங்கே செல்வார்கள்? என்ன சாப்பிடுவார்கள்? என்று ராகுல் காந்தி கேட்கிறார். ஆனால் அடுத்த தேர்தலுக்குள் இந்தியாவில் கள்ளத்தனமாக குடியேறிய அனைவரும் வெளியே வீசப்படுவார்கள் என்று நான் உறுதி அளிக்கிறேன்” என்றார்.

இந்த நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மேற்கு வங்காளத்தில் ஒரு போதும் என்.ஆர்.சி பட்டியலுக்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். மேலும், சாதி மற்றும் மத அடிப்படையில் நீங்கள் என்.ஆர்.சி.யை செயல்படுத்த முடியாது என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்காளத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
2. பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை - மம்தா பானர்ஜி
பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
3. புலம்பெயர்ந்தோரை மாநிலத்திற்கு அழைத்து வர 105 கூடுதல் சிறப்பு ரெயில்கள்: மம்தா பானர்ஜி
புலம்பெயர்ந்தோரை அழைத்து வர 105 கூடுதல் சிறப்பு ரெயில்கள் விடப்படும் எனமேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
4. உள்துறை அமைச்சகத்தின் கண்டிப்புக்கு பிறகு மத்தியக்குழுவுக்கு மே.வங்க அரசு அனுமதி
உள்துறை அமைச்சகத்தின் கண்டிப்புக்கு பிறகு மத்தியக்குழுவுக்கு மேற்கு வங்காள அரசு அனுமதி அளித்தது.
5. மேற்குவங்கத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது - முதலமைச்சர் மம்தா பானர்ஜி
மேற்குவங்கத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.